ஏஜென்ட்டிடம் லட்சங்களைக் கொடுக்க முன் இந்த கம்பெனிகள் மற்றும் வெப்சைட்களில் Apply செய்து பாருங்கள்

0

சிங்கப்பூரில் வேலைகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பலருக்குத் தெரியாது. ஏஜெண்டிடம் பணம் கொடுத்தால், நமக்கு வேலை கிடைத்துவிடும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் லட்சங்களைச் செலவழிக்கும் முன், சிறிது நேரம் நாமும் வேலை தேட வேண்டும்.

இது மிகவும் கடினமான காரியம் அல்ல. ஆனால் நல்ல நிறுவனங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பது மிகவும் முக்கியம். சிங்கப்பூரில் உங்களுக்குத் தெரிந்தவர்களிடமிருந்து இந்தத் தகவலைப் பெறலாம். அல்லது இணையத்தளங்களில் சென்று அதைப் பற்றிய தகவலைப் பார்க்கவும். நிறுவனத்தைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் நிறுவனம் எப்படி இருக்கும் என்பது பற்றிய அடிப்படைத் தகவலை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

சிங்கப்பூரில் High Demand ஆக உள்ள R1 தொழிலாளர் ஆக என்ன செய்ய வேண்டும்? சம்பளம் 1600 டாலர் முதல்

பெறும்பாலும் அதிகமான நிறுவனங்களுக்கு இணையதளம் இருக்கும். அங்கு சென்றால், பிற நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது பற்றிய தகவல் கிடைக்கும். இது Careers/Jobs என்ற பிரிவில் இருக்கும். அந்தப் பக்கத்தில், உங்களுக்குத் தேவையான துறைகளுக்கான தெளிவான தகவலை இணங்கான முடியும்.

உங்களுக்கு என ஒரு Linkedin பக்கத்தை தயார்செய்து வைத்துக்கொள்ளுங்கள். அதில் உங்களுடைய விபரம் மற்றும் வேலை அனுபவம் என்பவற்றை குறிப்பிட முடியும்.

உங்கள் விண்ணப்பத்தை தெளிவான நிலையில் வைத்திருங்கள். ஒரு நிறுவனத்திற்கு Apply செய்யாமல் அதிகமான நிறுவனத்திற்கு Apply செய்யுங்கள். ஏனெனில், வேலை கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கும்.

மார்ச் இல் சிங்கப்பூர் வருபவரா இருந்தால் இந்த ஆவணங்களை கட்டாயம் வைத்திருங்கள்

கீழே குறிப்பிடப்படும் இணையத்தளங்களில் உங்களுக்குப் பொருத்தமான வேலைகளைத் தேடிக்கொள்ள முடியும்.

  • https://sg.indeed.com
  • https://jobscentral.com.sg
  • https://www.jobstreet.com.sg
  • https://www.mycareersfuture.gov.sg
  • https://sg.jobsdb.com

நீங்கள் வேலை தேடக்கூடிய இணையதளங்களைக் கொண்ட சிங்கப்பூர் நிறுவனங்கள் சில இங்கே உள்ளன. இந்த நிறுவனங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் அவர்களின் வலைத்தளங்களில் காணலாம்.

  • https://bike.shimano.com/en-SG/information/CAREERS.html
  • https://www.emerson.com/en-sg/careers
  • https://www.kinergy.com.sg/careers
  • https://www.wohhup.com/careers
Leave A Reply

Your email address will not be published.