டாம்பனிஸ்விரைவுச்சாலையில் BMW கார் தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழப்பு!
அக்டோபர் 31 ஆம் தேதி அதிகாலை டாம்பனிஸ் விரைவுச்சாலையில் (TPE) ஒரு கார் தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து அதிகாலை சுமார் 2.55 மணியளவில் சென்ட்ரல் விரைவுச்சாலை (CTE) செல்லும் வெளியேறும் சாலையருகே ஏற்பட்டது. மீட்புப்படையினர் வந்தபோது, BMW 520i வகை கார் தலைகீழாக கவிழ்ந்து தீப்பிடித்திருந்தது.
சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை (SCDF) தெரிவித்ததாவது, தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பயன்படுத்தி தீயை விரைவாக அணைத்தனர் கார் சறுக்கியிருக்கலாம் என்று போலீசார்
சந்தேகிக்கின்றனர்.
Roads.sg பேஸ்புக் பக்கத்தில்
பகிரப்பட்ட வீடியோக்களில், கார் எரிந்து கொண்டிருக்கும் காட்சியும் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் காட்சிகள் காட்டுகின்றன.
விபத்துக்குப் பிறகு, நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) சில மணி நேரங்களுக்கு SLE மற்றும் CTE செல்லும் வெளியேறும் சாலைகளை மூடியது. பின்னர் காலை சுமார் 9.20 மணியளவில் சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன. தீ விபத்தின் காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.