செம்பவாங் HDB வீட்டில் தீ 50 பேர் வெளியேற்றம் 2 பேர் மருத்துவமனையில் அனுமதி!

0

இன்று (21ம் தேதி) அதிகாலை செம்பவாங் கிரசன்ட் பகுதியில் உள்ள ப்ளாக் 362A-வில் உள்ள ஒரு HDB வீட்டில் தீப்பற்றி எரிந்தது. இதனால் அருகிலிருந்த சுமார் 50 பேரை பாதுகாப்பாக வெளியேற்றினர். தீப்பற்றிய வீட்டில் இருந்த இருவர் புகை மூச்சு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புத்துறை (SCDF) தெரிவித்ததாவது, மூன்றாவது மாடியில் உள்ள ஒரு படுக்கையறையில்தான் தீ ஆரம்பித்தது. தகவல் கிடைத்த உடனே தீயணைப்பு வீரர்கள் வந்து, ஒரு நீர்த்தாரை பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தினர். புகையை சுவாசித்த இருவரும் சிங்கப்பூர் பொதுமருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக SCDF மற்றும் போலீஸ் அதிகாரிகள் அருகிலிருந்த பிற குடியிருப்பாளர்களையும் வெளியேற்றினர். தீ ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.