டிசம்பர் 15 முதல் ஐந்து புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்.
செங்காங் வெஸ்ட், புவாங்கோக், அப்பர் சேரங்கூன், கம்பஸ்வெயில் மற்றும் புங்கோல் சென்ட்ரல் பகுதிகளில் வசிப்போர் இனி நகரம்தான் நேராக செல்லும் வசதி பெற உள்ளனர். இந்த பகுதிகளுக்கு புதிய ஐந்து “சிட்டி-டயரக்ட்” பேருந்து சேவைகள் டிசம்பர் 15 முதல் அறிமுகமாகின்றன. சிங்கப்பூரில் வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதிகளின் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இவை செயல்படுத்தப்படுகின்றன.
பேருந்து எண்கள் 679, 680, 681, 682 மற்றும் 683 வேலை நாட்களிலேயே இயக்கப்படும். காலை 7 மணிக்குப் பிறகும், மாலை 6 மணியிலிருந்து பிசி நேரங்களில் இயங்கும் இந்த பேருந்துகள் ஆர்ச்சர்ட், தோபி காட், நவேனா, டவுன்டவுன் மற்றும் சன்டெக் சிட்டி போன்ற முக்கிய இடங்களுக்கு விரைவு சாலைகள் வழியாகவே செல்வதால் பயணிகள் நகரத்தை வேகமாக அடைய முடியும். பொது விடுமுறை நாட்களில் இவை இயங்காது.
அதே நேரத்தில், டிசம்பர் 14 முதல் 146-ஆம் எண் பேருந்தின் பாதையும் நீட்டிக்கப்பட உள்ளது. புதிய பாதை கோவான் MRT நிலையம் மற்றும் கோவான் ஹப்பை சுற்றி செல்லும். இதன் மூலம் ஹவ்காங் ஸ்ட்ரீட் 13, ஹவ்காங் அவென்யூ 1 மற்றும் ஹவ்காங் ஸ்ட்ரீட் 21 பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து வசதி கிடைக்கும்.