காலாங் HDB-யில் காபி ஷாப்பில் தீ:100 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்!நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி.

0

டிசம்பர் 4 ஆம் தேதி நள்ளிரவு கடந்த சில நிமிடங்களில், காலாங் பகுதியில் உள்ள ஒரு HDB குடியிருப்புத் தொகுதியில் உள்ள காபி ஷாப்பில் தீ ஏற்பட்டது. முன்னெச்சரிக்கையாக அங்கு இருந்த சுமார் 100 பேரை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

பூன் கெங் ரோட்டில் உள்ள ப்ளாக் 11-ல் ஏற்பட்ட இந்த தீ விபரம் குறித்து, சுமார் 12.30 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை (SCDF) தெரிவித்தது. அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், காபி ஷாப்பின் சமையலறை புகை வெளியேற்றும் குழாய் தீப்பற்றியிருந்ததை கண்டனர்.

தீயை அணைக்க இரண்டு தண்ணீர் குழாய்கள் பயன்படுத்தப்பட்டது. சூடு மற்றும் புகையால் சில உணவு கடைகள் சேதமடைந்தன. புகை மூச்சு காரணமாக ஒருவரை சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.