யிஷூன் அவென்யூ 3 விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு!

0

டிசம்பர் 14 ஆம் தேதி இரவு யிஷூனில் இடம்பெற்ற போக்குவரத்து விபத்தில் 20 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

யிஷூன் அவென்யூ 3 மற்றும் யிஷூன் சென்ட்ரல் சந்திப்பில் நடந்த இந்த விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், இரண்டு கார்கள் மற்றும் ஒரு லாரி சம்பந்தப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 38 வயதான கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரவு சுமார் 10.20 மணிக்கு விபத்து நடந்ததாக காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திலேயே 20 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

19 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும் மூன்று பேர் சிறிய சிறிய காயங்களுக்கு உள்ளானார்கள் ஆனால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்லவில்லை. விபத்துக்குப் பிறகு எடுத்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. இந்த விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.