சிங்கப்பூர் செலெட்டார் எக்ஸ்பிரஸ்வேயில் 42வயது நபரின் உயிரை காவு கொண்ட சாலை விபத்து!
சிங்கப்பூர் ஜனவரி 6 ஆம் தேதி அதிகாலை, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 42 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.
இந்த விபத்து காலை சுமார் 6 மணியளவில் நடந்ததாக காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறின.
செலெட்டார் எக்ஸ்பிரஸ்வேயில் இருந்து மத்திய எக்ஸ்பிரஸ்வே நோக்கிச் செல்லும் பாதையில் இந்த சம்பவம் நடந்தது.
பலத்த காயங்களுடன் அவர் செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக 48 வயதுடைய கார் ஓட்டுநர் விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறார். விசாரணை தொடர்கிறது.