சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் வேயில்நான்கு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி!

0

செவ்வாய்க்கிழமை மாலை, ஜனவரி 6 அன்று, சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் வேயில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து மாலை சுமார் 7.20 மணியளவில், செலேட்டார் எக்ஸ்பிரஸ் வேயை நோக்கிச் செல்லும் பாதையில் ஏற்பட்டது.

இணையத்தில் பகிரப்பட்ட வீடியோக்களில், ஒரு வெள்ளை நிற பெரிய கார், ஒரு சிவப்பு நிற காரின் மீது ஏறி நின்றது போல காணப்பட்டது. அவற்றின் முன்னால் ஒரு டாக்ஸியும், பின்னால் சேதமடைந்த மற்றொரு சிவப்பு நிற காரும் இருந்தன. விபத்து இடம் பெற்ற இடத்தில் ஒரு ஆம்புலன்ஸும் இருந்தது.

இந்த விபத்தில் மூன்று கார்கள் மற்றும் ஒரு டாக்ஸி சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். 69 வயதான டாக்ஸி ஓட்டுநர், அவருடன் பயணம் செய்த 49 வயது ஆண், 54 வயதான ஒரு கார் ஓட்டுநர் மற்றும் அவருடன் இருந்த 27 வயது பெண் ஆகியோர் டான் டாக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
போலீஸ் விசாரணைகள் இடம் பெறுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.