யிஷூனில் குப்பை லாரி கவிழ்ந்த விபத்து 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!

0

ஜூலை 5 காலை, யிஷூனில் உள்ள செம்பாவாங் சாலை மற்றும் யிஷூன் அவென்யூ 7 சந்தியில் குப்பை லாரி ஒன்று சறுக்கி கவிழ்ந்ததில் மூவர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

47 வயதான லாரி ஓட்டுநரும், அவருடன் இருந்த 47 மற்றும் 60 வயதுடைய இரு ஆண்களும் Khoo Teck Puat மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி ஓட்டுநரிடமும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், குப்பை லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து கிடப்பதும், அருகிலிருந்த மின்விளக்கு கம்பம் சேதமடைந்திருந்ததும் தெரிகிறது. மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்திலேயே மூவருக்கும் முதலுதவி அளித்த பிறகு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.