இன்ஸ்டிடூட்களில் கம்பனி போட போகிறீர்களா? பணத்தை செலுத்த முதல் இதனை சற்று கவனியுங்கள்

0

சிங்கப்பூரில் முன்பு போன்று ஸ்கில்ட் டெஸ்ட் ஒதுக்கீட்டை இன்ஸ்டிடூட்கள் வழங்குவதில்லை. காரணம், சிங்கப்பூருக்கு வருவதற்கான ஸ்கில்ட் டெஸ்ட் ஒதுக்கீட்டை சிங்கப்பூர் அரசாங்கம் குறைத்துள்ளது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். பலர் ஸ்கில்ட் டெஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழைப் பெற்ற பிறகும், சிங்கப்பூருக்கு வருவதைத் தள்ளிப் போடுகிறார்கள். 

நீங்கள் இன்ஸ்டிடூட்களில் பணத்தை செலுத்த முதல் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், சில இன்ஸ்டிட்யூட்க்கள் அவர்களே கம்பெனி போட்டுத் தருகிறோம் என்று கூறி போட்டும் கொடுக்கிறார்கள். 

முதலில், தரமான முதன்மையான இன்ஸ்டிடூட்களில் பணத்தைக் கட்டி சேருங்கள்.  இன்ஸ்டிடூட்களில் சர்டிபிகேட் வாங்கியவுடன் உங்களுக்கு தெரிந்த அல்லது உங்களது நண்பர்கள் / உறவினர்களுக்கு நல்ல பழக்கப்பட்ட ஒரு அனுபவமான நம்பகத்தன்மையான ஒரு ஏஜண்டை நாடுவது சிறந்தது. அதன் மூலமாக ஒரு பொருத்தமான நல்ல சம்பளமுடைய வேலையை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

ஏனெனில், சில இன்ஸ்டிடூட்கள் மூலமாக கம்பனி போடும் போது, உங்களது தகுதி, வேலைக்கு சற்று சிரமமான கம்பனிகள் போடு பட்டால் அது உங்களுக்குத்தான் கடினமாக மாறும். சிலவேலை, தரமான இன்ஸ்டிடூட்களில் கம்பனி போடும் போது அது உங்களிக்கு நல்லதாக மாறலாம்.

நீங்கள் பணத்தை செலுத்த முதல் என்ன வேலை, சம்பளம் என்ன, உங்களுக்கு அந்த வேலை பொருத்தமா என்ற தகவல்களை நன்கு அறிந்த பின்னர் இன்ஸ்டிடூட்களில் போட நேரிட்டால் போடுங்கள். இல்லையெனில், ஏஜண்ட் மூலமாக போடுவது சிறந்தது.

Leave A Reply

Your email address will not be published.