லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளான்!

0

ஜனவரி 17 அன்று மாலை 6.15 மணியளவில் அங் மோ கியோ தெரு 22 மற்றும் அங் மோ கியோ அவென்யூ 1 சந்திப்பில் லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் 21 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தான். உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேரில் கண்ட சாட்சி ஒருவர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சாலையில் அசையாமல் கிடந்ததை விவரித்தார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வருவதற்கு முன்பே லாரி டிரைவர் மற்றும் அருகில் இருந்தவர்களால் அவசர முதலுதவி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

29 வயதான லாரி டிரைவர், கூறுகையில் சம்பவம் நடந்தபோது தான் வலதுபுறம் திரும்பும்போ இச்சம்பவம் நிகழ்ந்தது என தெளிவுபடுத்தினார். பல ஆண்டுகளாக வாகனம் ஓட்டிய அனுபவம் மற்றும் எச்சரிக்கையுடன் இருந்த போதிலும், அவர் துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணைகள் நடாத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.