பெரிய மலைப்பாம்பு ஒன்று கோழிப் பண்ணையில் காணப்பட்டது.

0

மலேசியாவின் திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் 120 கிலோகிராம் எடையுள்ள மலைப்பாம்பு பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாநில குடிசார் பாதுகாப்புப் படைக்கு இன்று காலை 7.45 மணிக்கு தகவல் கிடைத்தது.

ஒரு கிராமவாசி தனது கோழிப் பண்ணையில் ஒரு பெரிய பாம்பைப் பார்த்ததாகக் கூறினார்.

6 அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

சுமார் 10 நிமிடங்களில் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி மலைப்பாம்பு பிடித்தனர்.

மலைப்பாம்பு தற்காலிகமாக ஒரு கூண்டில் வைக்கப்பட்டு, பின்னர் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் அதிகாரத்துக்கு ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அடிக்கடி வெள்ளப்பெருக்குகள் ஏற்படும் இந்த காலகட்டத்தில் இதுபோன்ற ஆபத்தான வனவிலங்குகள் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று படைத் தலைவர் அறிவுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.