ஆயர் ராஜா (AYE) விரைவுச்சாலையில் தொடர் விபத்து ஒரு பெண் காயம்!
சிங்கப்பூரின் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் (AYE) இன்று காலை (ஜூலை 11) ஒரு சாலை விபத்து ஏற்பட்டது. முன்னால் நின்றிருந்த காரைத் தவிர்க்க, ஒரு டிரைவர் திடீரென வேறொரு பாதையில் திரும்பியதால், பல வாகனங்கள் மோதி ஒரு தொடர் விபத்து ஏற்பட்டது.
திடீர் பாதை மாற்றத்தைத் தவிர்க்க முடியாமல் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தங்கள் பைக்குகளில் இருந்து விழுந்தனர். திடீர் பிரேக்கிங் காரணமாக அருகிலுள்ள மற்ற கார்களும் ஒரு லாரியும் விபத்துக்குள்ளானது. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களில் ஒருவரான 24 வயது பெண் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து பற்றி போலீசாருக்கு இன்று காலை 9:15 மணியளவில் தகவல் வந்தது. காயமடைந்த பெண் உணர்வுடன் இருந்ததாகவும், அவர் நேஷனல் யூனிவர்சிட்டி ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்துக்கான விசாரணைகள் இடம் பெறுகின்றன.