யூனிடெட் ஸ்கொயர் மால் அருகே 21 வயது இளைஞர் மரணம் விசாரணை இடம் பெற்று வருகிறது!
சிங்கப்பூர் – ஜூன் 24ஆம் தேதி காலை, Novenaவில் உள்ள யூனிடெட் ஸ்கொயர் ஷாப்பிங் மாலின் (101 தாம்சன் சாலை) டாக்சி நிறுத்தம் அருகே 21 வயதான ஒரு இளைஞர் மரணமடைந்த நிலையில் காணப்பட்டார்.
காலை 6.50 மணி அளவில் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கும், சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படைக்கும் (SCDF) தகவல் அளிக்கப்பட்டது.
விரைந்து வந்த அவர்கள், அந்த இளைஞர் அசைவில்லாமல் கிடப்பதை பார்த்து, சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
சம்பவம் நடைபெற்ற இடத்தின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியானது. இதில், காவல்துறை வாகனங்கள், குற்றவியல் விசாரணை வான் உள்ளதையும் காண முடிந்தது.
முதற்கட்ட விசாரணை முடிவுகளைத் தொடர்ந்து, இது ஒரு இயற்கையல்லாத மரணம் என்றாலும், தீங்கு செய்யப்பட்டது போன்ற ஆதாரங்கள் எதுவும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
விசாரணை தொடர்கிறது.