படித்து முடித்தும் Documents இல்லாமல் Work Pass Apply செய்பவரா? இதை கவனியுங்கள்
சிங்கப்பூர் Work Pass விண்ணப்பிப்பவர்களுக்கான கல்வி ஆவணங்கள் எதுவும் உங்களிடம் இல்லையென்றால் என்ன செய்வது என்பது உங்களுக்கு தெரியுமா?
சிங்கப்பூரில் பணிபுரிய, EPass, SPass அல்லது TEP இற்கு பணியாளருக்கு Degree certificate தேவை. ஆனால் சில Degree முடித்து கையில் Degree certificate எடுக்காதவர்கள் சிங்கப்பூரில் வேலை பெற முயற்சிப்பார்கள். அவர்களிடம் Degree certificate இருக்காது. இந்த சூழ்நிலையில் விண்ணப்பிப்பவர் என்ன செய்வது என்பது முக்கியமாகும்.
பெப்ரவரியில் சிங்கப்பூர் வருபவரா இருந்தால் இந்த ஆவணங்களை கட்டாயம் வைத்திருங்கள்
விண்ணப்பதாரர் Degree படிப்பை முற்றிலுமாக முடித்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தும் கடிதத்தை விண்ணப்பதாரர் படித்த College அல்லது University இலிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
அக் கடிதத்தில் Degree படிப்பின் பெயர், படிப்பின் காலம், நீங்கள் சமர்ப்பிப்பதாயின் உங்களுடைய Degree certificate பெறும் தற்காலிக தேதி போன்ற தகவல்கள் இருக்க வேண்டும்.
சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் கூற்றுப்படி, இவை உட்பட அனைத்து தகவல்களையும் ஒரு கடிதம் ஊடாக வழங்கலாம். ஆயினும் புதியவர்கள் விண்ணப்பிக்கும் முன் SAT ஐச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.