MCE சுரங்கத்தில் சிமென்ட் லாரி விபத்து ஒருவருக்கு லேசான காயம் போக்குவரத்து தாமதம்!
ஜூலை 21 மாலை சுமார் 5.30 மணியளவில், மரினா கோஸ்டல் எக்ஸ்பிரஸ்வே (MCE) சுரங்கத்தில் உள்ள சுவரில் சிமென்ட் லாரி ஒன்று மோதி, ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே வெளியேறும் இடத்திற்கு அருகே மூன்று பாதைகள் மூடப்பட்டன இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டது. அதில், லாரியின் முன்பகுதி சற்று உயர்ந்து சுரங்க சுவரில் சிக்கியிருந்தது. அருகிலுள்ள சுவரின் சில பகுதிகள் சேதமடைந்திருந்தன.
ஒருவர் சிறிய காயங்களுக்காக பரிசோதிக்கப்பட்டார், ஆனால் மருத்துவமனை செல்ல மறுத்தார். லாரி வழுக்கி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
43 வயதுடைய லாரி டிரைவர் தற்போது போலீசாருடன் விசாரணையில் ஒத்துழைத்துவருகிறார். இந்த விபத்து தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.