SPS Transit பஸ்சில் முதியவர் நிலைதடுமாறி விழுந்து உயிரிழப்பு!

0

புதன்கிழமை (மார்ச் 12) மாலை, SPS Transit பஸ்சில் பயணித்த 80 வயது முதியவர் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து SPS Transit பேச்சாளர் கிரேஸ் வூ தெரிவித்ததாவது, அந்த முதியவர் பஸ்சில் இறங்குவதற்காக தனது இருக்கையிலிருந்து எழுந்தபோது, கைப்பிடியைப் பிடிப்பதற்குள் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அவர் பயணித்த 262-ஆம் எண் பஸ் Ang Mo Kioல் உள்ள ஒரு சாலைச் சந்திப்பில் வலதுபுறம் திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்தது.

பஸ் ஓட்டுனர் உடனடியாக முதலுதவி வழங்கி, ஆம்புலன்சை அழைத்ததாக வூ தெரிவித்தார். காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் இரவு 8 மணியளவில் சம்பவம் குறித்து தகவல் பெற்றதாக கூறினர்.

முதியவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், பின்னர் அங்கு உயிரிழந்தார்.

அவரது மறைவை கேள்விப்பட்டு தாங்கள் மிகவும் கவலையில் உள்ளதாக SPS Transit தெரிவித்ததோடு, அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டது. இதுகுறித்த காவல்துறையின் விசாரணை தொடருகிறது.

Leave A Reply

Your email address will not be published.