புவாங்காக்கில் பார்க் கிரீன் காண்டோமினியத்தில் தீ விபத்து 100 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்!
புவாங்காக்கில் உள்ள பார்க் கிரீன் காண்டோமினியத்தில் உள்ள ஒரு யூனிட்டில் அக்டோபர் 6 ஆம் தேதி மாலை தீ விபத்து ஏற்பட்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) இரவு 8:35 மணியளவில் 8 ரிவர்வேல் லிங்கிற்கு வரவழைக்கப்பட்டு, நான்காவது மாடியில் உள்ள கட்டடத்தில் தீப்பிடித்து எரிவதைக் கண்டனர். அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் கட்டடத்திற்குள் யாரும் இல்லை.
தங்கும் அறை மற்றும் சமையலறை பகுதிகளில் தீ பற்றியது தீயணைப்பு வீரர்கள் இரண்டு நீர் ஜெட் தீயணைப்பு இயந்திரங்களை பயன்படுத்தி தீயை அணைத்தனர். தீ அணைக்கப்பட்டாலும், வெப்பம் மற்றும் புகையால் மீதமுள்ள பகுதிகள் சேதமடைந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள யூனிட்களில் இருந்து சுமார் 100 பேர் வெளியேற்றப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக, காயங்கள் எதுவும் இல்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Image scdf/ Facebook