செலிடார் விரைவு நெடுஞ்சாலை விபத்தில் நால்வர் காயம்!
டிசம்பர் 20 அன்று புக்கிட் திமா விரைவுச்சாலை நோக்கி செலிடார் விரைவுச்சாலையில் இரண்டு கார்களும் இரண்டு லாரிகளும் தொடராக மோதியதில் நான்கு பேர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இரவு 9:55 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 53 மற்றும் 31 வயதுடைய இரண்டு கார் சாரதிகள், 37 வயதான லொறி சாரதி மற்றும் 39 வயதான பயணி ஆகியோர் அடங்குவர்.
காயப்பட்ட அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஒருவர் விசாரணைக்காக பொலிஸாருக்கு உதவியுள்ளார்.
கடந்த மாதத்தில் குறைந்தது மூன்று இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Image Singapore road accident.com