சிங்கப்பூரர் உட்பட நான்கு பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது!

0

ஜோகூர் பாருவில் போதைப்பொருள் கடத்தியதாக 33 வயது சிங்கப்பூரர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். மலேசியாவின் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அவர் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

30 முதல் 40 வயதுக்குட்பட்ட மற்ற இரண்டு சிங்கப்பூரர்கள் மற்றும் தாய்லாந்து நாட்டவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டார். அவர்கள் ஒரு வாடகை குடியிருப்பில் போதைப்பொருள் கலந்த வேப்ஸ் தயாரித்ததாக சந்தேகிக்கப்பட்டது.

அந்த இடத்தில் ஹெராயின், கெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட 7 வகையான போதைப்பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த குழு டிசம்பரில் தங்கள் நடவடிக்கைகளை தொடங்கியதாக கூறப்படுகிறது.

விசாரணைகள் தொடர்வதால் மற்ற மூன்று சந்தேக நபர்களும் பெப்ரவரி 5 ஆம் திகதி வரை பொலிஸ் காவலில் இருப்பார்கள்.

Leave A Reply

Your email address will not be published.