சிங்கப்பூரில் உள்ள Giant சூப்பர் மார்க்கெட் 700 பொருட்களின் ஜிஎஸ்டி வரி உயர்வை ஏற்பதாக அறிவிப்பு!
சிங்கப்பூரில் பிரபல சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒன்றான ‘Giant’ சூப்பர் மார்க்கெட் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி என்றழைக்கப்படும் ‘ஜிஎஸ்டி’ வரி 8%- லிருந்து 9% ஆக உயர்வடைய உள்ளதால். பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில், ‘Giant சூப்பர் மார்கட் வாடிக்கையாளர்கள் தாம் வாங்கும் 700 அத்தியாவசியப் பொருட்களுக்கான ஒரு சதவீத ஜிஎஸ்டி வரி உயர்வை எங்கள் நிறுவனம் 2024- ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதங்கள் வரையிலன காலப்பகுதிவரை ஏற்கும் உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்களும் இதில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எங்களது சூப்பர் மார்க்கெட்டில் வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் முதியோர் வாங்கும் பொருட்களுக்கு 4% தள்ளுபடி வழங்கப்படும் இச்சலுகை 2024- ஆம் ஆண்டு முழுவதும் அமுலில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.