சிங்கப்பூரில் பெண்கள் பலாத்கார தண்டனைகள் கடுமையாக்கப்பட்டதா? நாசம் செய்யப்பட்ட இந்தோனேசியப் பணிப்பெண்ணின் வாழ்க்கை.
வெளிநாட்டு பணிப்பெண்ணை நாசம் செய்த 69 வயதுமிக்க ஆண் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
45 வயதுமிக்க இந்தோனேசியப் பணிப்பெண், டான் ஜெக் துவாங் என்ற அந்த நபரை கவனித்து கொள்ளும் பணியை பார்த்து வந்துள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு டான், பணிப்பெண்ணை நாசம் செய்து வந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
இந்தக் குற்றங்கள் ஐந்து மாதங்கள் அதாவது 2020 நவம்பர் முதல் 2021 மார்ச் வரை நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
ஆடவர் அறைக்குள் பணிப்பெண் நுழைந்ததும், பணிப்பெண்ணின் கையை இழுத்து பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் உடனடியாக பலவீனமாகவும், அசையமுடியாத அளவுக்கு மயக்கம் வந்த நிலைக்கு கொண்டு சென்றதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டன.
பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் மானப்பங்கம் செய்தது ஆகிய இரு குற்றச்சாட்டுகளை டான் ஜெக் துவாங் ஒப்புக்கொண்டார்.
மேலும், ஆறு குற்றச்சாட்டுகள் தண்டனையின் போது கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.