சிங்கப்பூரில் Lifting Supervisor வேலைக்கு Apply செல்வது எப்படி. சம்பளம் நாளுக்கு SG40$ வரை..!

0

சிங்கப்பூரில் வேலைக்குச் செல்வது தங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பல இளைஞர்கள் இன்னும் நினைக்கிறார்கள். காரணம் சம்பளம் மற்றும் வாழ்வாதார நிலைமை என்பனவாகும்.

Diploma அல்லது Degree படித்து வேலைக்குச் சென்றாலும், இன்னும் சிலர் குறைந்த சம்பளம்தான் வாங்குகிறார்கள். பள்ளிக்குச் செல்லாமல் சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்றவர்கள், Course செய்து வேலை மாறினால் அதிகப் பணம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். 

ஏஜென்ட்டிடம் லட்சங்களைக் கொடுக்க முன் இந்த கம்பெனிகள் மற்றும் வெப்சைட்களில் Apply செய்து பாருங்கள்..!

சிங்கப்பூரில் Lifting Supervisor, பெரிய கட்டுமானத் தளங்களில் பொருட்களைத் தூக்குவதற்கு கிரேனைப் பயன்படுத்துவது தொடர்பான மேற்பார்வை நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் ஆவர்.  Lifting Supervisor இன் வழிகாட்டலின் கீழ்தான் Crane ஐ செயற்படுத்துபவர் கட்டுப்பட வேண்டும்.  இந்த Course இன் கட்டணம் S$350 முதல் S$500 வரை ஆகும்.

Course நான்கு பாட நாட்கள் இருக்கும். நான்கு நாட்களில் பாடத்தினை முடித்துவிடலாம். நீங்கள் விரும்பினால் வார இறுதி நாட்களில் கூட தனியாகப் படிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை மட்டும் என்றால், தொடர்ந்து 4 ஞாயிற்றுக்கிழமைகள் செல்ல வேண்டும். தமிழ் மொழியில் தேர்வெழுத முடியாது. ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

மார்ச் இல் சிங்கப்பூர் வருபவரா இருந்தால் இந்த ஆவணங்களை கட்டாயம் வைத்திருங்கள்..!

இந்த பாடத்திட்டத்தை எடுக்க, நீங்கள் ஏற்கனவே Rigging and Signalman அல்லது Marine Rigger and Signalman Course படித்திருக்க வேண்டும். இத்துறையில் குறைந்தது மூன்று மாதங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும். வயது குறைந்தபட்சம் 21 ஆக இருக்க வேண்டும். 

இந்த தகுதியுடன், நீங்கள் படிப்பை முடித்த பிறகு அந்த நிறுவனத்திலோ அல்லது வேறு எந்த நிறுவனத்திலோ மேற்பார்வையாளராகப் பணியாற்றலாம். இது முடிந்ததும், உங்களுக்கு ஒரு நாளைக்கு 30 முதல் 40 சிங்கப்பூர் டாலர்கள் ஊதியமாக கிடைக்கும். 

Leave A Reply

Your email address will not be published.