சிங்கப்பூர் Yishunல் மோட்டார் சைக்கிள் கார் விபத்து: 28 வயது நபர் மருத்துவமனையில் அனுமதி!
மார்ச் 12 ஆம் தேதி காலை 7:40 மணியளவில் Yishunல் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் விபத்துக்குள்ளானது.
Yishun அவென்யூ 8 இல் இந்த விபத்து நடந்தது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த 28 வயதுடைய நபர் காயமடைந்து கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தின் வீடியோவில், வலதுபுறம் திரும்பிய கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதைக் காட்டுகிறது. விபத்தை அடுத்து, வாகனங்களின் துண்டுகள் சாலையில் சிதறின. காயமடைந்த நபருக்கு உதவுவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்த மேலும் இருவர் நிறுத்தினர்.
விபத்து குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். காரை ஓட்டி வந்த 31 வயது நபர், போலீசாரின் விசாரணைக்கு உதவி வருகிறார்.