உட்லண்ட்ஸில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் விபத்தில் மரணம்!
ஜனவரி 14 அன்று உட்லண்ட்ஸில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 40 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த விபத்து உட்லண்ட்ஸ் அவென்யூ 10 மற்றும் உட்லண்ட்ஸ் அவென்யூ 7 சந்திப்பில் பிற்பகல் 1:15 மணியளவில் நிகழ்ந்தது.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் மயங்கிய நிலையில் காணப்பட்டு
உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் உயிர் பிழைக்கவில்லை.
விசாரணைகள் தொடர்வதால், 49 வயதுடைய வேன் ஓட்டுனர் அதிகாரிகளுக்கு ஒத்துழைத்து வருகிறார்.
Image Singapore Road accident.com