உட்லண்ட்ஸ் சாலை விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழப்பு!
அக்டோபர் 4 ஆம் தேதி காலை உட்லண்ட்ஸில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 47 வயதுடைய நபர் இறந்தார்.
இந்த விபத்து உட்லண்ட்ஸ் அவென்யூ 3 வெளியேறும் இடத்திற்கு அருகில் உள்ள BKE இல் காலை 8:20 மணியளவில் நடந்தது காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
சாலையில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து கிடப்பதை இணையத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் காட்டுகிறது. மேலும் ஒரு மஞ்சள் கார் சாலை ஓரத்தில் நிற்கின்றது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்
உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கார் ஓட்டுனர், 42 வயதுடைய நபர், போலீசாரின் விசாரணையில் உதவி வருகிறார்.