சிங்கப்பூரில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது மற்றும் வெளியில் செல்ல வெளிநாட்டு தொழிலாளர்கள் Exit Pass விண்ணப்பிக்க தேவையில்லை..!
கோவிட்-19க்கு எதிராக சிங்கப்பூரில் தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் வரும் ஏப்ரல் 1 முதல் பொழுதுபோக்கு மையங்களைப் பார்வையிட வெளியேறும் முன் அனுமதிச் சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.
இவை தங்குமிடங்களில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பொருந்தும் என சிங்கப்பூர் பிரதமர் லீ அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தங்களுடைய தங்குமிடங்களிலிருந்து வெளியேறுவதற்கு முன் பொது இடங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வதற்கான Exit Pass இனை தாங்கள் வேலை புரியும் நிறுவனங்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
முழுமையாக தடுப்பூசி போட்ட தொழிலாளர்கள் Exit Passக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை. தடுப்பூசி ஏற்றாத ஊழியர்கள் மட்டும் அந்த Exit Pass எடுத்து ART சோதனை முடித்து பொது இடங்களுக்கு சென்றுவரலாம்.
சுகாதார அமைச்சகமானது கடந்த வாரம் பொது இடங்களுக்கு சென்று வருவதற்கு வார நாட்களில் 15,000 ஊழியர்களும், பொது விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் 30,000 ஊழியர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டது.
இன்று (மார்ச் 24) MOH வெளியிட்ட அறிக்கையில் இனி கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட தொழிலாளர்களின் வருகைக்கு முன்னதான ART சோதனை அவசியமில்லை என்று கூறியுள்ளது.
அத்துடன் பயண கட்டுப்பாடுகள் பாரிய அளவில் தளர்த்தப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் இன்று வியாழக்கிழமை (மார்ச் 24) அறிவித்தார்.
கிறுமித் தொற்று நிலைமைக்கு முன்னர் இருந்ததை போலவே சிங்கப்பூரில் உள்ளவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய முடியும் என்பதை மேலும் அவர் சுட்டிக்காட்டினார்.
கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசி போடாத நபர்கள் தனிமைப்படுத்தல் நிலைக்கு உள்ளாகாமல் பயணிக்க அனுமதிக்கும் தடுப்பூசி பயண ஏற்பாடு (VTL) இலகுபடுத்தப்படும்.
அத்தோடு பூரணமாக கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான பெரும்பாலான பயணக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். VTL திட்டம் இந்திய நாட்டிற்கும் பொறுந்தும்.
ஆகவே இந்திய நாட்டுக்கும் கட்டுப்பாடுகளை பெரிய அளவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் லீ சியென் லூங் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கை மற்றும் எல்லை நடவடிக்கைகளை தளர்த்துவது குறித்து மேலும் தெரிவித்தார்.
கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மற்றும் 12 வயது மற்றும் அதற்குக் குறைவாநவர்கள் இம்மாதம் 31ம் தேதி அன்று இரவு 11.59 மணி முதல் சிங்கப்பூருக்கு செல்வதற்கு முன்னர் ப்ரி டிபாசர் டெஸ்ட் (Pre Departure Test) மட்டுமே எடுத்து இனி சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.