வடிகால் குழாயில் சிக்கிய 2 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு பாதுகாப்பாக மீட்ட அதிகாரிகள்!
பிப்ரவரி 18 அன்று, கிளார்க் குவே எம்ஆர்டி அருகே ஒரு குறுகிய வடிகால் குழாயில் 2 மீட்டர் நீளமுள்ள ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு சிக்கிக் கொண்டது.
பாம்பின் ஒரு பகுதி குழாயில் இருந்தது, மீதமுள்ள பகுதி வாய்க்காலில் கிடந்த நிலையில், அது தப்பிக்க முயன்றுகொண்டிருந்தது.
பாம்பை கண்ட தொழிலாளர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
தேசிய பூங்கா வாரியத்தின் (NParks) அதிகாரிகள் சுமார் ஐந்து மணி நேரம் முயற்சி செய்து, கான்கிரீட்டை சுற்றி துளையிட்டு பாம்பை பாதுகாப்பாக மீட்டனர்.
பாம்பு பின்னர் மண்டை வனவிலங்கு குழுமத்திற்கு சுகாதார பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது, அதன்பிறகு அது மீண்டும் காட்டில் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.