விமானப் பணியாளரை நடுவானில் கடித்ததற்காக பயணி கைது விசாரணை நடந்து வருகிறது!
அமெரிக்காவைச் சேர்ந்த 55 வயது பயணி ஒருவர், விமானப் பணிப்பெண்ணை கடித்ததற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஜனவரி 16ம் திகதி அன்று டோக்கியோவில் இருந்து அமெரிக்காவிற்கு 159 பயணிகளுடன் ஏஎன்ஏ விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது. விமானம் நடுவானில் இருந்த போது மது போதையில் இருந்த பயணி விமான பணிப்பெண்ணை கடித்துள்ளார்.
பின்னர், விமானம் உடனடியாக ஹனேடா விமான நிலையத்திற்குத் திரும்பியது, அங்கு அந்த நபர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் விமர்சனத்தை பெற்றுள்ளது, மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.