ஹென்லி பாஸ்போர்ட் உலகளாவிய தரவரிசைகளில் சிங்கப்பூர் முதலிடம்!
பாஸ்போர்ட், முக்கிய பயண ஆவணமாக இருந்தாலும், உலகளாவிய சுற்றுலா துறையினை மேம்படுத்துவதற்காக பாஸ்போர்ட் மட்டும் போதும் விசா தேவை இல்லை என்று ஒவ்வொரு நாடும் அறிவிப்பு வெளியிட்ட வண்ணம் உள்ளன.
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை தொடர்ந்து முதல் தரவரிசையில் உள்ளன.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் இந்த வரிசையில் இணைந்துள்ளன. பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 194 நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கிறது.
சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் தரவரிசையில் இந்தியா எண்பதாவது இடத்தில் உள்ளது. பாஸ்போர்ட் தரவரிசையில் ஐரோப்பிய நாடுகள் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறி வருகின்றன, அதே நேரத்தில் சிங்கப்பூர் உலகளவில் முன்னணியில் உள்ளது.