2023 ஆம் ஆண்டில் 112 மில்லியன் பயணிகளுடன் சவுதி விமான போக்குவரத்து 26% புதிய உச்சத்தைத் தொடுகிறது!

0

2023 ஆம் ஆண்டில், சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் வழியாக சுமார் 112 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர். இந்த முந்தைய ஆண்டை விட 26% சதவீதமும், 2019 ஆம் ஆண்டின் அளவை விட சுமார் 8% சதவீதமும் அதிகமாகும்.

பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பு, கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட சவால்களைத் தொடர்ந்து சவுதியின் விமானப் போக்குவரத்து துறை பலமாக மீண்டு வருவதைக் குறிக்கிறது.

2023 ஆம் ஆண்டிற்கான சவுதி அரேபிய பொது விமான போக்குவரத்து ஆணையத்தின் அறிக்கை, சவுதி விமான நிலையங்கள் வழியான விமானங்களின் எண்ணிக்கை சுமார் 815,000 ஐ எட்டியுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.

இது ஆண்டுக்கு ஆண்டு கணக்கிடுகையில் 16% அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. விமானச் செயல்பாட்டில் இந்த அதிகரிப்பு, சவுதி அரேபியாவின் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ந்து வரும் வேகத்தையும், தொற்றுநோய்க்குப் பிந்தைய நிலையில் மீண்டு வருவதையும் பறைசாற்றுகிறது.

மேலும், 2023 ஆம் ஆண்டில் சவுதி விமான நிலையங்களில் கையாளப்பட்ட விமான சரக்குகளின் அளவு 7% வளர்ச்சியடைந்து, முந்தைய ஆண்டின் 854,000 டன்னுடன் ஒப்பிடும்போது சுமார் 918,000 டன்களை எட்டியுள்ளது.

சரக்குகளை கையாளுவதில் இந்த அதிகரிப்பு, விமானப் போக்குவரத்தில் சவுதி முக்கிய மையமாக விளங்குகிறது என்பதையும், வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதன் உள்கட்டமைப்பில் நடைபெறும் மேம்பாட்டையும் காட்டுகிறது.

Leave A Reply

Your email address will not be published.