சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்விமானங்களில் பயணிகள் பவர் பேங்க் பயன்படுத்த தடை!

0

ஏப்ரல் 1 முதல், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மற்றும் ஸ்கூட் விமானங்களில் பயணிகள் தங்கள் சாதனங்களை சார்ஜ் செய்ய பவர் பேங்க்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும், விமானத்தின் USB போர்ட்கள் மூலம் பவர் பேங்க்களை சார்ஜ் செய்யவும் அனுமதிக்கப்படாது. இந்த விதி பாதுகாப்பு காரணங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது,

ஏனெனில் பவர் பேங்க்கள் லித்தியம் பேட்டரிகளாகக் கருதப்படுகின்றன, அவை ஆபத்தானவையாக இருக்கலாம்.

பவர் பேங்க் சாதனங்களை விமானங்களுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

SIA படி, பயணிகள் தங்கள் hand luggageல் அவற்றை வைத்திருக்க முடியும்.பயணிகள் சிறப்பு அனுமதியின்றி100Wh வரை திறன் கொண்ட பவர் பேங்க்களை கொண்டு வரலாம்.100Wh முதல் 160Wh வரையிலான பவர் பேங்க்களுக்கு, விமான நிறுவனத்திடமிருந்து அனுமதி தேவை.

SIA இன் பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்கூட்டும் இதே விதிகளை அறிவித்துள்ளது. அனைவருக்கும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக இரு விமான நிறுவனங்களும் சர்வதேச பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.