கர்மன் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானுக்கு சிங்கப்பூர் இரங்கல் தெரிவிக்கிறது!
சிங்கப்பூர் – வெளியுறவுத் துறைக்கான இரண்டாவது அமைச்சரும், பிரதமர் அலுவலகத்தில் அமைச்சருமான டாக்டர். மாலிகி ஒஸ்மான், ஜனவரி 3ம் திகதி அன்று ஈரானில் நடந்த தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார், இதன் விளைவாக கிட்டத்தட்ட 100 பேர் கொள்ளப்பட்டும் மற்றும் 280 பேர் காயமடைந்தனர்.
ஜனவரி 6 அன்று வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட கடிதத்தில், டாக்டர் மாலிகி கெர்மானில் நடந்த இரட்டை குண்டுத் தாக்குதலினால் மரணித் த மற்றும் காயமடைந்தவர்களது குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தித்தார்.
2020 ஆம் ஆண்டில் ஈராக்கில் அமெரிக்க ஆளில்லா விமானத்தால் கொல்லப்பட்ட உயர்மட்ட தளபதி காசிம் சுலைமானியை நினைவுகூரும் வகையில் கெர்மானில் நடந்த ஒரு விழாவின் போது வெடிப்புகள் நிகழ்ந்தன. குண்டுவெடிப்புகளுக்கு பயங்கரவாதிகள் காரணம் என்று தெஹ்ரான் கூறியது, ஜனவரி 4 அன்று, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள இஸ்லாமிய அரசு தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.