Electrical Skilled Test அடித்து சிங்கப்பூர் வர இருப்பவரா? பணம் செலுத்த முன் இதனை கவனிக்க..!

0

எலக்ட்ரிக்கல் டெஸ்டில் (Electrical Skilled Test) மொத்தம் 3 படிமுறைகள் உள்ளன. 

படிமுறை 1 – Institute மற்றும் Agent களுக்கு பணம் செலுத்துதல்

மின் திறன் சோதனைக்கு (Electrical Skilled Test) 2.30 முதல் 2.80 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இருப்பினும், இன்ஸ்டிட்யூட் மற்றும் அதன் முகவரைப் பொறுத்து இந்தத் தொகை மாறுபடலாம்.

இதில், தேர்வை முடிக்க மட்டுமே மேற்கண்ட தொகை பொருந்தும். தேர்வில் தேர்ச்சி பெற்று சிங்கப்பூர் வர வேண்டுமானால், உங்கள் கைகளில் 3.50-4.50 லட்சம் தயாராக இருக்க வேண்டும். இருப்பினும், கட்டணத்தை முழுமையாக செலுத்த வேண்டிய அவசியமில்லை. நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கூட செலுத்தலாம். 

நீங்கள் Institute களில் சேரும்போது ஒரு கட்டணத்தையும், Main Test இல் கலந்துகொள்ளும்போது ஒரு கட்டணத்தையும், Test முடித்த பிறகு சான்றிதழை வாங்கும்போது மீதமுள்ள கட்டணத்தையும் செலுத்தலாம்.

படிமுறை 2 – IPA

கம்பெனி போட்டு IPA வந்த பிறகு, அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் அதாவது, அதிகபட்சமாக 2.80 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு முதலில் தேர்வெழுதி Certificate பெறுங்கள். அதன் பிறகு, குறிப்பிட்ட காலப்பகுதியிற்கு இடையில் முழு தொகையையும் கம்பெனி போட்டுக் கொள்ளலாம்.

படிமுறை 3 – Main Test

சிறப்பு Electrical Skilled Test Institute kalukku, சேரும் போது உங்களின் அசல் kadavuchcheettai koduthu பணம் செலுத்த வேண்டும். பிறகு அதற்கான ரசீதையும் பெறுங்கள். பின்னர் பயிற்சியில் முதலில் Theory வகுப்புகள் நடத்தப்படும். ஒரு மணி நேரம் Theory வகுப்புகள் நடைபெறும். 

சிங்கப்பூர் செல்ல Skilled Test கான சிறந்த 4 நிறுவனங்கள்..!

கேள்விகள் எப்படி இருக்கும்?

இந்தத் தேர்வில் மொத்தம் 25 கேள்விகள் இருக்கும். இதில் 25 கேள்விகளில் 13 கேள்விகளுக்கு சரியாக பதிலளித்தால் தேர்ச்சி பெறுவீர்கள். இந்த Theory தேர்வு எளிதாக இருக்கும். 

இந்த 25 கேள்விகள் எப்படி இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். சில பாதுகாப்பு தொடர்பான கேள்விகள், கேபிள்கள் தொடர்பான கேள்விகள் மற்றும் சூத்திர கேள்விகள். 

Time Limit என்ன?

தியரி முடிந்ததும் Practical Test நடைபெறும். Theory Test 1 மணி நேரம் மட்டுமே. இருப்பினும், Practical தேர்வு மொத்தம் 4 மணி நேரம் ஆகும்.

இருப்பினும், நிறுவனங்களில் நடத்தப்படும் கட்டிங் தேர்வில், நீங்கள் 3 முதல் 3.5 மணி நேரத்திற்குள் Theory மற்றும் Practical Tests களில்  தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான், Main Test 4 மணி நேரத்திற்குள் நீங்கள் இரண்டு Test களையும் சரியாக முடிப்பீர்கள் என்பதை உங்கள் பயிற்சியாளர் உறுதியாக நம்புவார். இல்லையெனில் அவர்கள் உங்களை Main Test இற்கு அனுப்ப மாட்டார்கள். 

சிங்கப்பூரில் வேலை கிடைப்பதற்கான Skilled Test இல் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டீர்களா? நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஆபத்து..!

இந்த Main Test இற்கு சிங்கப்பூரில் இருந்து கண்காணிப்பாளர்கள் வருவார்கள். அவர்கள் உங்கள் தேர்வுகளை மேற்பார்வையிடுவார்கள். எலக்ட்ரிக்கல் ஸ்கில்ஸ் டெஸ்டுக்கான பொதுவான நடைமுறை இது என்பதால், எல்லாவற்றையும் அறிந்த பிறகு தேர்வை மேற்கொள்ளவும். வெற்றி உறுதி!

Leave A Reply

Your email address will not be published.