உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் பாஸ்போர்ட் உலக தரவரிசையில் முதல் இடத்தில் தொடருகிறது!
சிங்கப்பூரின் பாஸ்போர்ட் உலகில் மிக சக்திவாய்ந்ததாக தொடருகிறது. புதிய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டு பட்டியலில், சிங்கப்பூர் குடிமக்கள் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது வருகையின்போது விசா பெற்று செல்லலாம்
சிங்கப்பூர் முதன்மை இடத்தில் உள்ளது.
ஜப்பான் மற்றும் தென்கொரியா இரண்டாவது இடத்தில் உள்ளன, 190 நாடுகளுக்கான செல்லும் அனுமதியுடன். பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய யூனியன் நாடுகள் 189 நாடுகளுக்கான அனுமதியுடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்துள்ளன.
இங்கிலாந்து 6-வது இடத்திலும், அமெரிக்கா 10-வது இடத்திலும் உள்ளன.
இந்தியா 77வது இடத்தில் உள்ளது.