அதிரடி சோதனை நடாத்திய சிங்கப்பூர் போலீஸார்: 93 பெண்கள் உட்பட 236 ஆண்களும் கைது
சிங்கப்பூரில், வெவ்வேறு குற்றங்கள் சாட்டப்பட்டிருக்கும் 329 பேரிடம் போலீஸார் திடீர் விசாரணை நடாத்தி வருகின்றனர்.
இந்த நபர்களுக்கு 1,300 க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் அவர்கள் $9.4 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 31ம் தேதி வரை தீவு முழுவதும் போலீசார் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அவர்கள் 236 ஆண்களையும் 93 பெண்களையும் கைது செய்தனர். இவர்கள் 15 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள்.
ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைனில் போலி காதல், வாடகைக்கு மக்களை ஏமாற்றுதல், போலி முதலீடுகள், போலி வேலை வாய்ப்புகள் மற்றும் அரசு ஊழியர்களைப் போல வேடமிடுதல் போன்ற மோசடிகளில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
தற்போது, இவர்கள் மேற்கொண்ட குற்றங்கள் தொடர்பில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.