சிங்கப்பூரின் பயண கட்டுப்பாடுகள் பெரிய அளவில் தளர்த்தப்படுகிறது. இந்திய பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

0

பயண கட்டுப்பாடுகள் பாரிய அளவில் தளர்த்தப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் இன்று வியாழக்கிழமை (மார்ச் 24) அறிவித்தார்.

கிறுமித் தொற்று நிலைமைக்கு முன்னர் இருந்ததை போலவே சிங்கப்பூரில் உள்ளவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய முடியும் என்பதை மேலும் அவர் சுட்டிக்காட்டினார்.

singapore workers

கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசி போடாத நபர்கள் தனிமைப்படுத்தல் நிலைக்கு உள்ளாகாமல் பயணிக்க அனுமதிக்கும் தடுப்பூசி பயண ஏற்பாடு (VTL) இலகுபடுத்தப்படும்.

அத்தோடு பூரணமாக கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான பெரும்பாலான பயணக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். VTL திட்டம் இந்திய நாட்டிற்கும் பொறுந்தும்.

ஆகவே இந்திய நாட்டுக்கும் கட்டுப்பாடுகளை பெரிய அளவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் லீ சியென் லூங் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கை மற்றும் எல்லை நடவடிக்கைகளை தளர்த்துவது குறித்து மேலும் தெரிவித்தார்.

கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மற்றும் 12 வயது மற்றும் அதற்குக் குறைவாநவர்கள் இம்மாதம் 31ம் தேதி அன்று இரவு 11.59 மணி முதல் சிங்கப்பூருக்கு செல்வதற்கு முன்னர் ப்ரி டிபாசர் டெஸ்ட் (Pre Departure Test) மட்டுமே எடுத்து இனி சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.

singapore workers

இது சிங்கப்பூர் அதனது எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான அவசியமான நிகழ்வுகளில் ஒன்றாக இது நோக்கப்படுகிறது. இந்திய தொழிலளர்கள் எவ்வித பிரச்சனையுமில்லமல் சிங்கப்பூர் வர முடியும்.

அத்துடன் சிங்கப்பூர் வந்திறங்கிய 24 மணி நேரத்திற்குள் ART சோதனை எடுக்க வேண்டிய அவசியமில்லை. அன்றாடம் சிங்கப்பூர் வருபவர்களின் எண்ணிக்கையில் எந்தவித வரையரைகளும் இருக்காது.

மேலும் நுழைவு அனுமதி (Entry Approval) இனிவரும் காலங்களில் அவசியமில்லை என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் புறப்படுவதற்கு முன்னர் நடாத்தப்படும் சோதனை அமலில் இருக்கும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) இன்று (மார்ச் 24)வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

singapore workers

தடுப்பூசிகளுக்கு மருத்துவ ரீதியாக தகுதியற்ற Long Term Pass வைத்திருப்பவர்கள், 13 முதல் 17 வயதுடைய Long Term Pass வைத்திருப்பவர்கள் மற்றும் Short Term Pass பார்வையாளர்கள் மற்ற செல்லுபடியாகும் நுழைவு அனுமதி வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்படுவர்.

முழுமையாக தடுப்பூசி போடாத நீண்ட கால அனுமதி பெற்றவர்கள் மற்றும் 13 வயது மற்றும் குறுகிய கால பார்வையாளர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.