புக்கெட் கடற்கரையில் மசாஜுக்குப் பின் சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிய மரணம்!

0

சிங்கப்பூர் சுற்றுலாப் பயணி லீ முன் டக், வயது 52, 7 டிசம்பர் இரவு தாய்லந்தின் புக்கெட் (Phuket) நகரில் உள்ள படோங் கடற்கரையில் மசாஜ் சென்டரில் 45 நிமிட எண்ணெய் உடல் மசாஜ் செய்த சிறிது நேரத்திலேயே காலமானார்.

மரணம் குறித்துப் பாத்தோங் Patong வட்டாரக் காவல்துறைக்கு தகவல்கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் உடல் மசாஜ் செய்வதற்காக சென்றபோது அவரது மனைவியும் அங்கு இருந்தார். கணவர் மதுபானம் அருந்திவிட்டுச் சென்றதாக அவர் கூறினர்.

அவர் மசாஜ் செய்த பிறகு ஓய்வெடுத்தார், ஆனால் திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. மசாஜ் சென்டரில் உள்ள ஊழியர்கள் CPR ஐ முயற்சி செய்தனர் காவல்துறை மற்றும் மருத்துவ உதவிக்கு அழைத்தனர், ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

லீயின் மனைவி பிரேதப் பரிசோதனையை மறுத்து, மதச் சடங்குகளுக்காக அவரது உடலை சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தார். மசாஜ் சென்டரின் பெயரை அதிகாரிகள் பகிர்ந்து கொள்ளவில்லை.

Leave A Reply

Your email address will not be published.