சிங்கப்பூரில் நடந்த மிகப்பெரிய பணமோசடி வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவரின் தடுப்புக்காவல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டதா?
“பில்லியன் டாலர் பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாங் ஷுயிமிங்கை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்”என்ற வழக்கறிஞர்களின் முயற்சியை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
S$1.8 பில்லியன் (US$1.3 பில்லியன்) மோசடி செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நான்கு பேரில் ஒரு சிங்கப்பூரர் வாங் ஒருவராவார்.
“அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் ஜாமீன் பெறக்கூடியது மற்றும் அவருக்கு முந்தைய தண்டனைகள் இல்லை என்பதால் அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்”என்று வாங்கின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
மேலும், அவர் Flight Risk தவறில் ஈடுபடக்கூடியவர் இல்லை என்றும், அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு தனது வீட்டு முகவரியில் இருக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
“Flight Risk என்பது சட்டவிரோதமாக வேறு நாட்டுற்கு தப்பிச் செல்லுதல் ஆகும்”.
எவ்வாறாயினும், “வாங் Flight Risk தவறில் ஈடுபடக்கூடியவர் என்றும், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் அவர் ஆதாரங்களை சிதைக்க முடியும்” என்றும் அரசுத் தரப்பு வாதிட்டது.
நீதிபதி சான் செங் ஆன் தனது தீர்ப்பில், “வாங்கின் வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களால் அவர் நம்பவில்லை” என்று கூறினார்.
வாங்கின் Flight Risk குறித்து அரசுத் தரப்பு “கடுமையான கண்டனங்களை” எழுப்பியுள்ளதாகவும், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், “வாங் ஆதாரங்களை சேதப்படுத்த மாட்டார் என்பதில் திருப்தி இல்லை” என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்கு இன்னும் நடந்து வருவதாகவும், விசாரணையின் நேர்மையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் நீதிபதி சான் கூறினார். வாங்கை மேலும் எட்டு நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் இன்னும் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள மற்ற மூன்று பேர் ஜாங் ருய்ஜின், சு ஜியான்ஃபெங் மற்றும் வாங் பாசன். அவர்கள் அனைவரும் சீன குடிமக்கள்.
இந்த வழக்கை வணிக விவகாரத் துறை (CAD) விசாரித்து வருகிறது. CAD என்பது சிங்கப்பூரின் white-collar குற்றவியல் நிறுவனமாகும்.
சிங்கப்பூரில் நடந்த மிகப்பெரிய பணமோசடி வழக்கு. Shell நிறுவனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளின் சிக்கலான வலையமைப்பு மூலம் பணம் மோசடி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.