செராங்கூனில் டாக்ஸி – கார் மோதி விபத்து: ஓட்டுநரும் பயணியும் காயம்!

0

சிங்கப்பூரில், மார்ச் 17-ம் தேதி இரவு 11:15 மணியளவில் செராங்கூன் சாலையில் ஒரு டாக்ஸியும் காரும் மோதின. டாக்ஸியின் பின்புறம் பலத்த சேதமடைந்தது, மற்ற காரும் சேதமடைந்தது. இந்த விபத்தில் 49 வயது டாக்ஸி ஓட்டுநரும், 44 வயது பெண் பயணியும் காயமடைந்தனர்.

Beh Chia Lor – சிங்கப்பூர் ரோடு Facebook பக்கத்தில் விகத்தின் காட்சிகள் வெளியிடப்பட்டன.
போலீசார் மற்றும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை டிரைவரையும், பயணியையும் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், மற்ற காரை ஓட்டி வந்த 48 வயது நபர் விசாரணைக்கு உதவுகிறார்.

Image / Beh Chia Lor facbook.

Leave A Reply

Your email address will not be published.