19 வயது இளைஞர் பூனை துன்புறுத்தல் மற்றும் திருட்டு உட்பட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்!
சிங்கப்பூரில் ஒரு 19 வயது இளைஞர் மீது பூனை துன்புறுத்தல், திருட்டு, தாக்குதல், மற்றொருவர் மீது ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியது போன்ற பல குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன.
செஞ்சா சாலையில் உள்ள வீடமைப்பு வாரிய குடியிருப்புக்கு வெளியே வைத்து அந்த இளைஞர் பூனை மீது அருவருப்பான செயலில் ஈடுபட்ட சம்பவம் கேமராவில் பதிவாகி, இணையத்தில் வேகமாக பரவியது.
விலங்குகளை கொடுமைப்படுத்துவதை தடுக்கும் சங்கம் சம்பவத்தை அதிகாரிகளிடம் தெரிவித்தது.
மேலும், பள்ளியில் இருந்து பணம் மற்றும் பிற பொருட்கள் அடங்கிய பணப்பை, வீட்டு வளாகத்தில் இருந்து சீப்பு, பவர்பேங்க் மற்றும் சார்ஜிங் கேபிள்கள் ஆகியவற்றை அந்த இளைஞர் திருடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தனித்தனி சந்தர்ப்பங்களில் மற்றொரு நபரை வாய் வார்த்தையால் திட்டியதாகவும், உடல் ரீதியாக தாக்கியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சில குற்றங்கள் நடந்தபோது அவருக்கு 18 வயதுக்குட்பட்டிருந்ததால் அவரது பெயரை வெளியிட முடியாது. ஏப்ரல் 16 ஆம் தேதி அவர் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொது இடத்தில் ஆபாசமான செயலில் ஈடுபட்டது உறுதியானால், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
தாக்குதலுக்காக, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்