விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநர் கைது போலீசார் விசாரணை தொடர்கிறது!
டிசம்பர் 15 அன்று ராஃபிள்ஸ் அவென்யூ மற்றும் ஸ்டாம்ஃபோர்ட் சாலை சந்தியில் கார் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்தார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) 37 வயது ஆண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றர்.
விபத்தை ஏற்படுத்தியதற்காக 37 வயது ஆண் கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
இந்த விபத்து SG ரோடு விஜிலன்ட்டின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் நொறுங்கி, MPVயின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.