தியோங் பாரு MRT station எஸ்கலேட்டர் விபத்தில் மூவருக்கு காயம்!
செப். 19, 2024 அன்று காலை தியோங் பாரு MRT நிலையத்தில் எஸ்கலேட்டர் விபத்தில் மூவர் காயமடைந்தனர். ஒருவர் நலை தடுமாறி பின்னோக்கி விழுந்து அவருக்குப் பின்னால் இருந்த இருவர் மீது மோதியுள்ளார். அவசரகால button அழுத்திய ஒரு பயணியால் எஸ்கலேட்டர் நிறுத்தப்பட்டது, மேலும் SMRT ஊழியர்கள் விரைவாக உதவி அளித்து ஆம்புலன்சை அழைத்தனர்.
காயமடைந்தவர்களில் இருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், மூன்றாவது நபர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார். SMRT ஊழியர்கள் எஸ்கலேட்டரைச் சரிபார்த்து, அதில் தொழில்நுட்பக் கோளாறுகள் இல்லை என்பதை உறுதிசெய்து, பின்னர் சேவையைத் தொடங்க அனுமதித்தனர்.
எஸ்கலேட்டர்களைப் பயன்படுத்தும் போது கைப்பிடிகளைப் பிடித்துக் கொள்ளுமாறு பயணிகளுக்கு SMRT நினைவூட்டியது மற்றும் வயதானவர்கள் அல்லது நடக்க சிரமப்படுபவர்கள் பாதுகாப்பிற்காக லிஃப்ட்களைப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்தது. காயமடைந்தவர்களுக்கு மேலும் உதவிகளை வழங்கினர்.