Kranji விரைவுச்சாலையில் BlueSG கார் மோதி விபத்து 11 வயது சிறுமி உட்பட இருவர் மருத்துவமனையில் அனுமதி!
மார்ச் 1 அன்று, புக்கிட் திமா விரைவுச்சாலையை (BKE) நோக்கிச் சென்ற க்ராஞ்சி விரைவுச் சாலையில் (KJE) BlueSG Car ஒன்று சறுக்கி இரண்டு பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து மதியம் 1.55 மணியளவில் நடந்தது, உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சாரதி, 39 வயதான பெண் மற்றும் அவரது மகள் என நம்பப்படும் 11 வயது சிறுமி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை காயமடைந்தவர்களை தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது.
ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட வீடியோவில், சாலை டிவைடரில் மோதி கார் மோசமாக சேதமடைந்ததைக் காட்டுகிறது. காரின் முன்பக்கமும் ஓட்டுநரின் பக்கமும் கடுமையாக சேதத்திற்குள்ளாய் என .
காவல்துறை இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Image sg road vijilante