சிங்கப்பூரில் கடத்தல் சிகரெட்டுகளுடன் இளைஞர் கைது – 1,550 பெட்டிகள் பறிமுதல்.
சிங்கப்பூரைச் சேர்ந்த 25 வயதுடைய ஒரு இளைஞர், வரி செலுத்தப்படாத 1,550 சிகரெட் பெட்டிகளுடன் சுங்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சோதனை ஜூலை 3ஆம் தேதி ஜுரொங் வெஸ்ட் மற்றும் புக்கித் பாட்டோக் பகுதிகளில் நடைபெற்றது. முதலில் அவர் ஜுரொங் வெஸ்ட் தெருவில் மடக்கிப் பிடிக்கப்பட்டார். பின்னர், புக்கித் பாட்டோக் தெருவில் இருந்த ஒரு வேனில் சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சுங்கத் துறை தெரிவித்ததாவது, இந்த சிகரெட்டுகளுக்கான வரி மற்றும் வரிவிலக்கு தொகை சேர்த்து சுமார் \$167,000 இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த இளைஞர் ஓருவரால் இந்த சிகரெட்டுகளை எடுத்துச் சென்று வழங்கும்படி அனுப்பப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
நீதிமன்ற நடவடிக்கை தொடர்கிறது குற்றம் நிரூபிக்கப்பட்டால், இளைஞருக்கு அதிகபட்சமாக 6 ஆண்டு வரை சிறைத்தண்டனை, அல்லது கடுமையான அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இந்தச் செயல்களில் பயன்படுத்தப்பட்ட வாகனம் கூட அரசால் பறிமுதல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.