காலாவதியான இந்திய பாஸ்போர்டை சிங்கப்பூரில் எவ்வாறு புதுப்பிப்பது..! 

0

காலாவதியான இந்திய பாஸ்போர்டை சிங்கப்பூரில் எவ்வாறு புதுப்பிப்பது..!

சிங்கப்பூரில் உங்களது காலாவதியான இந்திய பாஸ்போர்டை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை  www.hcisingapore.gov.in என்னும் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். 

அல்லது தூதரகம் அல்லது பாஸ்போர்ட் விண்ணப்ப மையங்களிலிருந்து இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு கட்டணமாக S$10.80  செலுத்த வேண்டும். தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்ப மையங்களில் ஏதேனும் ஒன்றில் நேரில் சமர்ப்பிக்கவேண்டும்.

தேவையான   ஆவணங்கள் :

பாஸ்போர்ட் புதுப்பித்தல் விண்ணப்ப படிவத்தை (அடையாளம் / புகைப்படம் சரிபார்க்கப்பட வேண்டும்) சமர்ப்பிக்க விண்ணப்பதாரர் நேரில் வர வேண்டும். தற்போதுள்ள காலாவதியான இந்திய பாஸ்போர்ட்டை கொண்டு வர வேண்டும்.

சமீபத்தில் நீங்கள் எடுத்த வண்ண புகைப்படம் (அளவு 2 inch X 2 inch) (5.1 X 5.1 cm) வெள்ளை நிறபின்னணியுடன், கடந்த 6 மாதங்களுக்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

NRIC / EP / SP / DP / WP போன்ற அடையாள அட்டை மற்றும் அந்த ஆவணங்களின் நகல்கள். சிறுவர்களுக்கு பாஸ்போர்ட்களை புதுப்பிக்க, பெற்றோரின் பாஸ்போர்ட்களின் நகல்களும் சமர்ப்பிக்கலாம்.

புதுப்பித்தலுக்கான   செயல்முறை   நேரம் : பொதுவாக 5- 8 நாட்கள்

பாஸ்போர்ட் அவசரமாக பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையுடையதெனில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரருக்குஎதிராக எந்த தடையும் இல்லாவிட்டால்  ஒரு நாளில் பெற்றுக்கொள்ள முடியும்.

Leave A Reply

Your email address will not be published.