சமூகத்தை ஒருங்கிணைக்க சிங்கப்பூரின் திறமைக்கு முன்னுரிமை திட்டமே தொடர்ந்து சிறந்த வழி..!

0

சமூகத்தை ஒருங்கிணைக்க சிங்கப்பூரின்’திறமைக்கு முன்னுரிமை’ திட்டமே தொடர்ந்துசிறந்த வழியாக இருக்கும் என்றுதுணைப்பிரதமர் லாரன்ஸ் வோங்கூறியிருக்கிறார்.

ஏனெனில் அது மக்கள் மேலும் சிறப்பாகத்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும்ஊக்குவிக்கும். முன்னோக்கிச்செல்லவேண்டும் என்ற முனைப்பைப் பாதுகாக்கும் என்றார் அவர்.

திறமையின் அடிப்படையில் ஒருவரைஅங்கீகரிக்கவில்லை என்றால் வேறு என்னமாற்றுவழி இருக்கமுடியும் என்றும் அவர்கேள்வி எழுப்பினார்.

இருப்பினும் ‘திறமைக்கு முன்னுரிமை’ அளிப்பதில் சில சிக்கல்களும் இருப்பதைஅவர் ஒப்புக்கொண்டார். உதாரணமாக வசதி படைத்தவர்கள் தங்கள்பிள்ளைகளுக்கு அதிக வாய்ப்புகளைஏற்படுத்திக்கொடுக்க முடியும்.

எனவே திறமைக்கு முன்னுரிமைஅளிக்கப்படுவதை அப்படியேவைத்துக்கொண்டு, அதை மேம்படுத்தும்வழிகளை ஆராயலாம். அதை மேலும்வெளிப்படையான, மனித நேயஅடிப்படையிலான திட்டமாகமுன்னெடுக்கலாம் என்றார் அவர்.

சிங்கப்பூர் மக்களாக ஒவ்வொரு தொழிலிலும், துறையிலும் இருக்கும் ஒவ்வோர் ஊழியரின்பங்களிப்பையும் மதிக்கக்கற்றுக்கொள்ளவேண்டும். குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் உட்படஅனைவரையும் மதிக்கவேண்டும்; மரியாதையுடன் நடத்தவேண்டும் என்று திருவோங் கேட்டுக்கொண்டார்.

சிரமமான நேரங்களில் நாம்தனித்துவிடப்படமாட்டோம் என்ற உணர்வுஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் வரவேண்டும் என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.