வெளிநாட்டு ஊழியர்கள் நலனில் நாங்கள் மிகுந்த அக்கரை கொள்கிறோம்.- பிரதமர்

0

நோய்த் தொற்றிலிருந்து மீண்டு நாடு இயல்பு நிலைக்கு திரும்ப சுமார் இரண்டு ஆண்டுகள் வரை கடந்துள்ளது.

இருப்பினும் அவற்றின் பாதிப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கின்றது. 

சிங்கப்பூரில்  அதிக எண்ணிக்கையான வெளிநாட்டு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

பாதுகாப்பு, சம்பளம் என சிங்கப்பூரை நாடிய தமிழக இளைஞர்கள் அதிகம். அப்படி நம்பி வந்தபணியாளர்களை நோய்த்தொற்றில் இருந்து இமை போல சிங்கப்பூர் அரசு காத்து வருவது மறுக்க முடியாதஉண்மை.

சிங்கப்பூரின் வளர்ச்சிப் பாதையில் வெளிநாட்டு ஊழியர்கள் இன்றி அமையாதவர்கள்.

சிங்கப்பூர் பிரதமர் இது குறித்து பேசுகையில், “வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து பணியாற்றும் ஊழியர்கள்இந்த சிங்கப்பூரை உருவாக்கி இருக்கிறார்கள்.

அவர்கள் நலனில் நாங்கள் அக்கறை கொள்கிறோம். ஒருவேளை நான் பேசுவதை வெளிநாட்டு வாழ்ஊழியர்களின் குடும்பத்தினர் பார்த்தால், அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்.

singapore workers

உங்கள் கணவரோ, உங்கள் மகனோ, உங்கள் அப்பாவோ இங்கு இருந்தால், அவர்களை நாங்கள்பத்திரமாகவே திரும்ப அனுப்புவோம். மேலும் இந்த கடினமான காலங்களைக் கடந்து செல்ல வேண்டும்” எனத்தெரிவித்து இருந்தார்.

சிங்கப்பூரின் ஒவ்வொரு கட்டிடத்திலும், நிறுவனத்திலும், சாலையிலும் வெளிநாட்டு பணியாளர்களுன் உழைப்புஉள்ளது. அப்படிப்பட்ட பணியாளர்களை கடினமான சூழல் ஒன்றில் சிறப்பாக கவனித்து வருகிறது சிங்கப்பூர்.

தற்போது கட்டுப்பாடுகளுடன் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் சிங்கப்பூர் தன் இயல்புவாழ்க்கையைத் தொடங்க வேண்டுமென்பதே அங்கு வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.