சிங்கப்பூரில் நோய்த் தொற்று பாதிப்பு மீண்டும் உயர்வு..!
சிங்கப்பூரில் இன்று 11,504 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள்பதிவாகியுள்ளன.
அது கடந்த சுமார் 3 மாதங்களில் இல்லாத ஆகஅதிக அன்றாட எண்ணிக்கை.
சம்பவங்களில்…..
உள்ளூரில் பதிவானவை – 10,732
வெளிநாடுகளிலிருந்து வந்தோர் – 772
கிருமித்தொற்றால் ஒரு மரணமும்நேர்ந்துள்ளது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மாண்டோர்மொத்த எண்ணிக்கை – 1,410
437 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெறுகின்றனர்.
36 பேருக்கு உயிர்வாயு தேவைப்படுகிறது.
9 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகசுகாதார அமைச்சு வெளியிட்ட அண்மைஅறிக்கை குறிப்பிட்டது.
வாரயிறுதியைத் தொடர்ந்துசெவ்வாய்க்கிழமை கணக்கிடப்படும்எண்ணிக்கை பொதுவாக அதிகமாக இருக்கும்.
இத்தகைய போக்கு குறித்து சென்ற ஆண்டுஅக்டோபர் மாதம், சுகாதார அமைச்சர் ஓங் யீகாங் கூறியிருந்தார்.
இன்று பாதிக்கப்பட்டோரில் சுமார் 9,989 பேருக்குமிதமான அறிகுறிகள் இருந்ததாகத்தெரிவிக்கப்பட்டது.