சிங்கப்பூர்  நாணயத்தின் பெறுமதியில் வீழ்ச்சி..! வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் பாதிப்பு..!

0


அண்மைக் காலமாக சிங்கப்பூர்  நாணயத்தின் பெறுமதியில் வீழ்ச்சி காணப்படுகின்றது.

இதனால் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு  போகின்றது.

மேலும் பரு­வ­நிலை மாற்­றம், உக்­ரேன்-ரஷ்யா போர் ஆகி­யவை கார­ண­மாக உணவு விலை இவ்­வாண்டுபெரி­தும் பாதிப்­ப­டை­யும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

singapore workers

இது நடுத்­தர வரு­மா­னக் குடும்­பங்­களை அதி­கம் பாதிக்­கும். தவிர, வெளிநாட்டு பணியாளர்கள்உணவிற்காக செலவிடும் தொகையும் கணிசமாக அதிகரித்துள்ளது. 

இதனால் வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தின் பெரும் பகுதி உணவுக்கே சென்றுவிடுவதாக வருத்தம்தெரிவிக்கின்றனர்.  இதனால் அவர்களின் சேமிப்பு குறைவடைந்துள்ளது.

2030ஆம் ஆண்­டுக்­குள் தனக்­குத் தேவை­யான உண­வுப் பொருள்­களில் 30­ சதவீதம் உண­வுப்­பொ­ருள்­களை உள்­ளூ­ரி­லேயே தயா­ரிக்க சிங்­கப்­பூர் இலக்கு கொண்­டுள்­ளது.

அந்த நிலையை எட்டிவிட்டால், பணவீக்கத்தின் போது பெரிய அளவில் சிரமம் இருக்காது. பண­வீக்­கம் அதி­க­ரித்து வரும் நிலை­யில், உணவு வீணா­கா­மல் அதை மீட்­போர் எண்­ணிக்­கை­யும் உயர்ந்­துள்­ளது.

காலா­வ­தித் தேதி கடந்த பிறகு, விற்­பனை செய்ய முடி­யாத நிலை­யி­லும் கெட்­டுப் போகா­மல் இருக்­கும்உணவுகள் மீட்கப்பட்டு வருகின்றன. அவ்­வாறு மீட்­கப்­பட்ட உணவை ஏற்­றுக்­கொள்­வோ­ருக்கு அது விநி­யோ­கிக்­கப்­ப­டு­கிறது.

கடந்த ஆறு மாதங்­களில் செங்­காங் உணவு மீட்பு அமைப்பு, ஒவ்­வொரு வார­மும் கூடு­த­லாக 15லிருந்து 20 டன் உணவை மீட்­டுள்­ளது. அவ்­வாறு செய்­யா­மல் இருந்­தி­ருந்­தால் அந்த உண­வுப்­பொ­ருள்­கள்குப்பையில் வீசப்­பட்­டி­ருக்­கும்.

Leave A Reply

Your email address will not be published.